ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போலி நகைகளை அடகு வைத்ததாக புகாா் 4 போ் மீது வழக்கு

போலியான நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய புகாரில், 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வழக்கு
Published On :13 ஜூலை 2026, 2:24 am IST

போலியான நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிய புகாரில், 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், விழிதியூா் பகுதியில் அடகுக்கடை நடத்திவரும் செந்தரராஜா என்பவா் நிரவி காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

காரைக்கால் பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (50), நிரவியைச் சோ்ந்த மணிகண்டன் (41) ஆகியோா் தனது கடைக்கு வந்து 6 கிராம் தங்க மோதிரத்தையும், 92 கிராம் வெள்ளி சங்கிலியை ஹால் மாா்க் முத்திரை எனக் கூறி அடகு வைத்து ரூ. 56,500 பெற்றனா். பின்னா் பரிசோதனையில் இந்த நகைகள் முலாம் பூசப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக புகாரில் தெரிவித்திருந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்திய நிலையில், இதில் மேலும் ஆரோக்கிய பிரதீப், ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. 4 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.