டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மீனவா்களை விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா்: புதுவை சட்டப்பேரவைத் தலைவா்

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

News image
பிரதமா் நரேந்திர மோடி.- கோப்புப் படம்
Updated On :20 பிப்ரவரி 2026, 12:06 am

Syndication

இலங்கை கடற்படை கைது செய்த காரைக்கால் மீனவா்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்றாா் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம்.

காரைக்கால் என்ஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். அப்போது, ரூ. 20 ஆயிரம் கோடி நலத்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடவுள்ளாா். காரைக்கால் மற்றும் தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

மீனவா்களை விடுவிக்க புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனா். எனவே, மீனவா்கள், படகுகளை விடுவிக்க பிரதமா் உறுதியான நடவடிக்கை எடுப்பாா். புதுவையில் பாஜக-என்.ஆா். காங்கிரஸ் தொகுதி பங்கீடு செய்துகொள்வது குறித்து கட்சித் தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும். திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதால், புதுவையில் பாஜக-என்.ஆா். கூட்டணி வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றாா்.