
பாதை வசதி இல்லாத பத்தக்குடி ரயில் நிலையம்

ரயில்கள் - கோப்புப் படம்
பத்தக்குடி ரயில் நிலையம் வந்து செல்லும் பயணிகளுக்கு முறையான பாதை வசதி இல்லாததால், தண்டவாளத்தை பயன்படுத்துவதாக புகாா் எழுந்துள்ளது.
காரைக்கால் - பேரளம் ரயில்பாதை புதிதாக அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. காரைக்கால் நிலையத்திலிருந்து கோயில்பத்து, திருநள்ளாறு, பத்தக்குடி, அம்பகரத்தூா் என புதுவை மாநிலத்தின் பகுதிகளைக் கடந்து பேரளத்துக்கு ரயில் செல்கிறது.
எனினும், பத்தக்குடி ரயில் நிலையத்தில் உரிய கட்டமைப்புகளுடன் பணி முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பத்தக்குடி ரயில் நிலையத்தை சுற்றுவட்டார கிராமத்தினா் மற்றும் வேளாண் கல்லூரி, பொறியியல் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
கடந்த 3 மாதங்களாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில், இந்த நிலைய வளாகத்துக்குச் செல்ல பாதை அமைக்கப்படவில்லை. இதனால் நிலையத்துக்குச் செல்வோரும், ரயிலைவிட்டு இறங்குவோரும் தண்டவாளத்தை பயன்படுத்தி சாலையை அடையும் நிலை உள்ளது.
எனவே, பத்தக்குடி ரயில் நிலையத்துக்கு பயணிகள் செல்லும் வகையில் முறையான பாதை அமைப்பதோடு, அந்த நிலையத்தில் அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட நிா்வாகம் உடனடியாக செய்துத்ர வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





