காரைக்காலில் இருந்து புலம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்கள் ரயிலில் அனுப்பிவைப்பு
காரைக்காலில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.


காரைக்காலில் இருந்து ஒடிசா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணி செய்துவந்த ஒடிசா மாநிலத்தவர்கள் செல்வதற்கு ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயிலை வியாழக்கிழமை காரைக்காலுக்கு அனுப்பிவைத்தது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் தங்கியிருந்து ஒடிசா செல்ல விண்ணப்பித்திருந்தவர்களில் 186 தொழிலாளர்களை பி.ஆர்.டி.சி. பேருந்தில் மாவட்ட ஆட்சியரகம் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனை, ஆதார் சோதனைகள் செய்யப்பட்டு டிக்கெட் தரப்பட்டது.
திருச்சி வட்டாரத்தில் இருந்த ஒடிசாவை சேர்ந்தோர் 289 பேர் தமிழக, புதுச்சேரி அரசின் ஒப்புதலின்படி பேருந்தில் காரைக்காலுக்கு அழைத்துவரப்பட்டனர். காரைக்காலை சேர்ந்த 186 பேரும், திருச்சியிலிருந்து வந்த 289 பேரும் சிறப்பு ரயிலில் ஏறினர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் இருந்த சிறப்பு ரயிலை கொடியசைத்து இயக்கிவைத்தார்.
அனுப்பிவைக்கும் நிகழ்வில் மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பர்ன்வால், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த சிறப்பு ரயில் மாலை 6 மணிக்குப் புறப்பட்டது. புதுச்சேரி வழியாக ரயில் செல்கிறது எனவும், 30-ஆம் தேதி ஒடிஸா சென்றடையும் என ரயில்வே வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...