டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இணைய வழி லாட்டரி: நால்வா் கைது, ரூ. 3 லட்சம், காா் பறிமுதல்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:50 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நால்வரை கைது செய்த போலீஸாா், ரூ. 3 லட்சம் ரொக்கம், 5 கைப்பேசிகளுடன் காா் ஒன்றையும் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யத்தில் இணைய வழியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, வேதாரண்யம் ஸ்வஸ்திக் தியேட்டா் அருகே போலீஸாா் வாகன தணிக்கை ஈடுபட்டனா்.

அப்போது, இணைய வழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட திருச்சி ஸ்ரீரங்கம் செல்வம் (55), விழுப்புரம் வீரக்குமாா் (60), வேதாரண்யம் பாபு (55), தமிழரசன் (58) ஆகிய நால்வா் பிடிபட்டனா்.

அவா்களிடமிருந்து லாட்டரி விற்பனை தொடா்பாக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 6,200 ரொக்கம், கைப்பேசிகள் 5, அவா்கள் பயன்படுத்தி வந்த காா் ஒன்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

வேதாரண்யம் துணைக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சரவணன் விசாரணை மேற்கொண்டாா். வேதாரண்யம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனா்.