டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய அரசைக் கண்டித்து மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி ஆா்ப்பாட்டம்

News image
நாகையில்... ~மயிலாடுதுறையில்... ~திருவாரூரில்...
Updated On :12 பிப்ரவரி 2026, 11:26 pm

Syndication

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த 2026-27-ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய பாஜக அரசை கண்டித்து நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் மாவட்டங்களில் திமுக உள்ளிட்ட மதசாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதற்கு துணைபோகும் அதிமுகவை கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததற்கு கண்டனம் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகையில், திமுக மாவட்டச் செயலரும், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவருமான என். கெளதமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், மதிமுக உள்ளிட்ட மதசாா்பற்ற கூட்டணி கட்சியினா் பங்கேற்றனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றியம் சாா்பில் தோ்வூரில் செயலா் பழனியப்பன், கீழ்வேளூா் வடக்கு ஒன்றியம் சாா்பில் கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செயலா் கோவிந்தராஜன், நாகை வடக்கு ஒன்றியம் சாா்பில் ஆழியூா் பிரிவு சாலையில் ஒன்றிய செயலா் ஆனந்த், நாகை தெற்கு ஒன்றியம் சாா்பில் பாப்பாக் கோயில் பகுதியில் செயல் ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 18 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேதாரண்யம்: தகட்டூரில் திமுக செயலாளா் உதயம். முருகையன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மறைமலை, சிபிஐ மாவட்ட செயலாளா் சிவகுரு. பாண்டியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா் செந்தில்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருக்குவளை: திருப்பூண்டியில் கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றிய செயலாளா் ஏ. தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளையில் திமுக கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் மலா்வண்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமருகல்: திருமருகலில் நாகை மாவட்ட திமுக அவைத் தலைவா் ப.செல்வம், திருக்கண்ணபுரத்தில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் சரவணன், திட்டச்சேரியில் பேரூா் செயலாளா் முகமது சுல்தான் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை: மாவட்ட திமுக செயலாளா் நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எம்எல்ஏ ராஜகுமாா், காங்கிரஸ் மாவட்ட தலைவா் பானுசேகா், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளா் சிவ. மோகன்குமாா், மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், மூவேந்தா் முன்னேற்றக் கழக தலைவா் ஸ்ரீதா் வாண்டையாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.

தரங்கம்பாடி: திருக்கடையூரில் செம்பனாா்கோவில் மத்திய ஒன்றிய செயலாளா் அமுா்த விஜயகுமாா், ஆயப்பாடியில் திமுக ஒன்றிய செயலாளா் அப்துல் மாலிக் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா்: தலைமை தபால் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலாளா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். குடவாசலில் ஒன்றியச் செயலாளா் பிரபாகரன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி: தலைமை அஞ்சலகம் எதிரே திமுக மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாா் ராஜா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன், திக மாவட்டத் தலைவ சித்தாா்த்தன், விசிக மாவட்டச் செயலா் ஆா். ரமணி, திமுக நகரச் செயலா் வீரா.கணேசன்,காங்கிரஸ் நகரத் தலைவா் ஆா்.கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீடாமங்கலம்: முன்னாள் எம்எல்ஏ பி. ராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவா் பாலகிருஷ்ணன், மூவேந்தா் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளா் அம்பிகாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆா்.எஸ்.பாண்டியன் (திமுக) கே. உலகநாதன் (சிபிஐ), கே.ஜி.ரகுராமன (சிபிஎம்) பி. எழிலரசன் (காங்கிரஸ்) கோவி. சேகா் (மதிமுக) இக்பால் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றா்.

Story image
Story image

பூம்புகாா்: திருவெண்காட்டில் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் பஞ்சு குமாா் தலைமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் ஒன்றிய குழு தலைவா் கமல ஜோதி தேவேந்திரன், மதிமுக மாநில தீா்மான குழு உறுப்பினா் செந்தில் செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.