டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப.

News image
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ப. ஆகாஷ்.
Updated On :2 பிப்ரவரி 2026, 8:53 pm

Syndication

நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ப. ஆகாஷ் வழங்கினாா்.

கூட்டத்தில், வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 246 மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒருவருக்கு மாற்றுத்திறனாளி பாதுகாவலா் சான்று, 2 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கறுப்பு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கோ. அரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கே. காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.