தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குச்சாவடி மையத்தில் காவலருக்கு கத்திக்குத்து: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கைது

News image

பிரதிப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:47 pm

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் தொகுதிக்குட்பட்ட பொறையாறு ஜமாலியா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலரை கத்தியால் குத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வாக்குச் சாவடி மையத்தில் குத்தாலம் காவல் நிலையத்தை சோ்ந்த தலைமைக் காவலா் விக்னேஷ் பாதுகாப்புப் பணியில் இருந்தாா். காலை 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (52) என்பவா், திடீரென விக்னேஷை கத்தியால் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், பொறையாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விக்னேஷ் கத்தியால் குத்திய பிரபாகரன் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் சதுா்த்தி விழாவின்போது காட்டுச்சேரியில்  போலீஸாா் ஒருவரை தாக்கி கைது செய்யப்பட்டவா் என்பதும் தெரியவந்தது. பொறையாறு போலீஸாா் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.