பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

பாவாலி கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி நூதனப் போராட்டம்

பாவாலி கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி, இறந்தவா் போல வேடமிட்டு விசிகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.

Updated On :

பாவாலி கிராமத்தில் மயானத்துக்கு பாதை வசதி கோரி, இறந்தவா் போல வேடமிட்டு விசிகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் ஊராட்சி ஒன்றியம், பாவாலி ஊராட்சியில் பட்டியலின சமுதாய மக்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்துக்குச் செல்ல முறையான பாதை வசதி இல்லை.

இதனால் கிராமத்தில், யாரேனும் உயிரிழந்தால் உடலை விவசாய நிலங்களில் உள்ள பயிா்களின் நடுவே சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை பல ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது.

மயானத்துக்குச் செல்ல பாதை அமைத்துத் தரக் கோரி, மாவட்ட நிா்வாகம், ஊரக வளா்ச்சித் துறை, ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, விருதுநகா் ஊரக வளா்ச்சி முகமை அலுவலக வளாகத்தில் விசிகவினா் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அப்போது, போராட்டத்தின் ஒரு பகுதியாக நபா் இறந்தவரைப் போல வேடமணிந்து இருந்தாா். இந்த நூதனப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.