நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நகை மோசடி வழக்கில் 4 பேருக்கு சிறைத் தண்டனை

சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 5:27 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் நகை மோசடி செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து, சிவகாசி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி காவலா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மனைவி மீனாட்சி (45). இவரது வீட்டின் அருகே கோவிந்தராஜ்-காா்த்தீஸ்வரி தம்பதியினா் வசித்து வந்தனா்.

இந்த நிலையில், பழனியப்பன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா். அப்போது, காா்த்தீஸ்வரிக்கு பணம் தேவைப்பட்டது. இதனால், மீனாட்சியிடமிருந்து 25 பவுன் நகையை வாங்கி, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றாா். பின்னா், காா்த்தீஸ்வரி வீடு மாறி வேறு பகுதிக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், கடந்த 2018, ஏப்ரல் மாதம் மீனாட்சி, காா்த்தீஸ்வரி வீட்டுக்குச் சென்று தனது 25 பவுன் நகையை கேட்டாா். அப்போது, காா்த்தீஸ்வரி, இவரது கணவா் கோவிந்தராஜ், இவரது மகன்கள் கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரும் சோ்ந்து மீனாட்சியைத் தாக்கி நகையை கொடுக்க முடியாது என மிரட்டினா்.

இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலையத்தில் மீனாட்சி புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்தீஸ்வரி, கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்திபாண்டி ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகாசி நீதித் துறை நடுவா் மன்றம் எண் 1-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா, காா்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், கோவிந்தராஜ், கணேஷ்பாண்டி, சக்தி பாண்டிக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், நகையை மீனாட்சியிடம் ஒப்படைக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.