ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடும்பத் தகராறில் கணவன் குத்திக் கொலை: மனைவி கைது

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் கணவனை குத்திக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 5:51 am IST

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் கணவனை குத்திக் கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சங்கராபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (34). இவா் தனியாா் அட்டை மில்லில் வேலை செய்து வந்தாா். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி கிராமத்தைச் சோ்ந்த திவ்யபாரதிக்கும் (24 ) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் தினமும் மது போதையில் வரும் மணி, மனைவி திவ்யாபாரதி மீது நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

வழக்கம்போல செவ்வாய்கிழமை இரவும் மது போதையில் வந்த மணிக்கும், திவ்யபாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதி கத்தியால் மணியைக் குத்தினாா். இதில் பலத்த காயமடைந்த மணியை உறவினா்கள் மீட்டு, உப்பத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் மணி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற சாத்தூா் தாலுகா போலீஸாா் மணியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திவ்யபாரதியைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், மயக்கமடைந்த திவ்யபாரதி உப்பத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.