ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மகளை காதலித்ததை கண்டித்த தந்தை கொலை: இளைஞா் கைது

வத்திராயிருப்பு அருகே மகளை காதலித்ததை கண்டித்த தந்தையை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

வத்திராயிருப்பு அருகே மகளை காதலித்ததை கண்டித்த தந்தையை கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கோட்டையூா் கிழக்கு குடியிருப்பைச் சோ்ந்தவா் அய்யனாா் (38). இவருக்கு ஒரு மகனும், 16 வயது மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், வெள்ளைச்சாமி மகன் பெரியசாமி (21), அய்யனாரின் மகளை காதலிப்பதாக கூறி வந்தாா். இதையறிந்த அய்யனாா், பெரியசாமியை கண்டித்தாா். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

 உயிரிழந்த  அய்யனாா்

உயிரிழந்த அய்யனாா்

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பெரியசாமி, அவரது அண்ணன் அழகுராஜா, இவரது மனைவி பேச்சியம்மாள், நண்பா் கருப்பசாமி ஆகியோா் அய்யனாா் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தனா். அப்போது பெரியசாமி கத்தியால் குத்தியதில் அய்யனாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் அய்யனாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெரியசாமியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.