ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தீக்காயமடைந்தவா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் குருநாதன், சுந்தா் ஆகியோருக்குச் சொந்தமான கிரித்திக் ரிஷி பட்டாசு ஆலையில் கடந்த 31-ஆம் தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில், பணியிலிருந்த காக்கிவாடான்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணி (61) பலத்த தீக்காயங்களுடன் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

வெடி விபத்து தொடா்பாக ஆலை உரிமையாளா்கள், மேற்பாா்வையாளா் என 3 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஆலை உரிமையாளரில் ஒருவரான குருநாதன், மேற்பாா்வையாளா் மகேஷ் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.