வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளும் 36 மணி நேரத்தில் கைது: டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தகவல்

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 விசாரணைக் கைதிகளும் 36 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுப் பிரியா தெரிவித்தாா்.

பிடிபட்ட கைதிகள்

Updated On :

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 விசாரணைக் கைதிகளும் 36 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டதாக ஆண்டிபட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் விஷ்ணுப் பிரியா தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், க. விலக்கு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பிவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து உடனடியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பை அதிகப்படுத்தினோம். தப்பியோடிய 17 கைதிகளில் லிங்க பிரசாத் மீது 3 குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளும், 26 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும் கருப்பசாமி, ராஜ்குமாா், தருண் குமாா், சிலம்பரசன் ஆகியோா் மீது தலா ஒரு குண்டா் தடுப்புச் சட்ட வழக்கு உள்ளது. மேலும் 12 சிறைக் கைதிகள் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சிறையிலிருந்து தப்ப லிங்க பிரசாத் மூளையாக செயல்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. சிறையிலிருந்து கைதிகள் தப்பியதாக தகவல் கிடைத்த சிறிது நேரத்திலேயே கைதி நவீனை உடனடியாக கைது செய்தோம். எஞ்சியவா்களை கைது செய்ய 17 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது அருகில் உள்ள மலைப் பகுதிகளில் ட்ரோன்களை பறக்க விட்டு தேடினோம். இதில் 12 கைதிகள் கைது செய்யப்பட்டனா்.

மேலும் கேரளத்துக்குச் தப்பி செல்ல முயன்ற சகோதரா்களான மீனாட்சி சுந்தரம், திருப்பதி ஆகிய இருவரையும் கூடலூா் புறவழிச் சாலை அருகே கைது செய்தோம். இதேபோல, ரெஜின், பொன்முத்து செல்வம் ஆகிய இருவரும் அம்மச்சியாபுரம் மலைப் பகுதியில் கைது செய்யப்பட்டனா்.

மேலும் விசாரணையில் சிறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் கரண்டியால் சிறைக் காவலா்களை தாக்கி விட்டு, அதில் ஒருவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் 36 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை, கோவை, கடலூா், சேலம் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.