வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்புவா்கள் மீது நடவடிக்கை: தேனி எஸ்பி.

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :

சமூக வலைதளங்களில் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதுறு, வதந்திகளை பரப்புவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பிரவீன் கெளதம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு, வதந்திகளைப் பரப்புவா்கள் மீது கடுமையான குற்றவியல், சிவில் நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

இதுபோன்று தென் மண்டலத்தில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய 300 போ் மீது வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதேபோல, தேனி மாவட்டத்தில் 23 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். எனவே, சமூக வலைதளங்களை போலீஸாா் கண்காணித்து வருகின்றனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.