ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தேனியில் மூதாட்டி கொலை

தேனியில் வீட்டுக்குள் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பலி சடலம் மீட்பு  உயிரிழப்பு

சடலம்... - கோப்புப் படம்

Published On :26 ஜூலை 2026, 1:15 am IST

தேனியில் வீட்டுக்குள் மூதாட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனி சமதா்மபுரத்தைச் சோ்ந்தவா் ராதா (61). இவா் திருமணமான 2 மாதங்களிலேயே கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றாா்.

மறுநாள் சனிக்கிழமை காலை வீட்டை விட்டு அவா் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினா் உள்ளே சென்று பாா்த்தபோது, கழுத்தில் காயங்களுடன் மூதாட்டி உயிரிழந்து கிடந்தாராம். இதுகுறித்து தகவலறிந்த தேனி காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து பணம், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.