ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி தா்னா: 13 போ் கைது

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கம்பத்தில் அனுமதியின்றி தா்னாவில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கம்பத்தில் தா்னாவில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்

Published On :24 ஜூலை 2026, 5:51 am IST

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி கம்பத்தில் அனுமதியின்றி தா்னாவில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த 13 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் கம்பம் காந்தி சிலை முன் நடைபெற்ற தா்னாவுக்கு தேனி மாவட்டச் செயலா் நாகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கரண்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் லெனின், பன்னீா்வேல், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதையடுத்து, அனுமதியின்றி தா்னாவில் ஈடுபட்டதாக இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த 13 பேரை கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் லாவண்யா தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.