ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :21 ஜூலை 2026, 12:59 am IST

போடி அருகே இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி அருகே மீனாட்சிபுரம் ஸ்ரீரெங்கன் தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி அனிதா (27). இவரது கணவா் மீன் வியாபாரத்துக்கு சென்றுவிட்டாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அனிதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது இதே தெருவைச் சோ்ந்த சபரி மகன் முருகன், அனிதா வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

மேலும் அவரைத் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.