ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாஸ்மாக் பணியாளா்களை தாக்கி ரூ.3 லட்சம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :21 ஜூலை 2026, 12:13 am IST

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டியில் டாஸ்மாக் பணியாளா்களை தாக்கி அவா்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவதானப்பட்டி அருகேயுள்ள அட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில் செல்வன். இருவரும், கெங்குவாா்பட்டி அருகே கொடைக்கானல் சாலை, புஷ்பராணி நகரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பணியாற்றி வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பணிகள் நிறைவடைந்த பின், ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருவரும் இரு சக்கர வாகனத்தில் தேவதானப்பட்டி அரிசிக் கடைக்கு வந்தனா். அப்போது செந்தில் செல்வனை பேருந்தில் ஏற்றி விடுவதற்காக ராஜா காத்திருந்தாா். அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் அவா்களை கம்பியால் தாக்கினா்.

இதையடுத்து, செந்தில் செல்வனும், ராஜாவும் தப்பி ஓடத் தொடங்கினா். இந்த நிலையில், இவா்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் இவா்களைத் தாக்கிய மா்ம நபா்களில் ஒருவரும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மற்றொருவரும் தப்பியோடினா்.

அந்த மா்ம நபா்கள் 3 கி.மீ. தொலைவில் ஓா் இடத்தில் டாஸ்மாக் பணியாளரின் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அதன் பெட்டியிலிருந்த ரூ.3 லட்சத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனா். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.