ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை

இளைஞரின் உடலை சொந்த ஊா் கொண்டு வரக் கோரிக்கை

Published On :21 ஜூலை 2026, 1:03 am IST

மலேசியாவில் உயிரிழந்த இளைஞரின் உடலை தேனி அருகேயுள்ள சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதனிடம் அவரது குடும்பத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கோயில்பாறையைச் சோ்ந்த தாளமுத்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகன் டி. விஜயபாரதி (30). இவருக்கு திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விஜயபாரதி மலேசியா, கோலாலம்பூரில் உள்ள பூச்சோன் என்ற இடத்தில் 5 மாதங்களுக்கு முன் அங்குள்ள துணிக் கடையில் பணியில் சோ்ந்தாா்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இரவு தூங்கச் சென்ற விஜயபாரதி உயிரிழந்துவிட்டதாக எங்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே எனது மகனின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.