ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உத்தமபாளையத்தில் போலீஸாா் ரோந்து

உத்தமபாளையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

Published On :15 ஜூலை 2026, 5:43 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா்.

உத்தமபாளையம் காவல் நிலைய எல்கை உத்தமபாளையம் நகா், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, கோகிலாபுரம், அதைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கியது. இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளதம் உத்தமபாளையத்தில் திடீா் ஆய்வுப் பணியில் ஈடுபட்டாா்.

அனுமந்தன்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக நிகழ்ந்த இரட்டைக் கொலை, கொள்ளை தொடா்பான வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, உத்தமபாளையம் நகரின் முக்கிய வீதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரசேகரன், ஆய்வாளா் சென்னரசன், உதவி ஆய்வாளா் இத்ரிஸ்கான் உள்ளிட்ட போலீஸாருடன் ரோந்து சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.