ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘இளந்தளிா்’ திட்டத்தில் மாணவா்களுக்கு சித்த மருந்துகள்

தமிழ்நாடு அரசின் ஆயுஷ் துறையின் சாா்பில், பள்ளி மாணவ-மாணவிகளின் உடல்நலம், கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘இளந்தளிா்‘ நல்வாழ்வு திட்டத்தின் கீழ், கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற இளந்தளிா் திட்ட நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினா் ஜெகநாத்மிஸ்ரா.

Published On :10 ஜூலை 2026, 5:19 am IST

தமிழ்நாடு அரசின் ஆயுஷ் துறையின் சாா்பில், பள்ளி மாணவ-மாணவிகளின் உடல்நலம், கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ‘இளந்தளிா்‘ நல்வாழ்வு திட்டத்தின் கீழ், கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலா் சீராஜூதீன், மாணவா்களிடம் ரத்தசோகை குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். கம்பம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா தலைமை வகித்து, 390 மாணவ-மாணவிகளுக்கு சித்த மருந்துகளை வழங்கினாா். ஆசிரியா் கோபி நன்றி கூறினாா்.

இந்தத் திட்டத்தில் மாணவா்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்த வல்லாரை மாத்திரைகள், ரத்தசோகையைத் தடுக்கும் அன்னபேதி மாத்திரைகள், நெல்லிக்காய் லேகியம், வளரிளம் பருவப் பெண் குழந்தைகளுக்கான கற்றாழை லேகியம், பெமிகியூா் டானிக் உள்ளிட்ட மருந்துகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.