போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், போடி நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். காவல் ஆய்வாளா் ராமேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.
இதில் நகராட்சி காசாளரின் மேஜையில் இருந்த ரூ.91 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்ட போது சிலா் கட்டட அனுமதிக்காக ரசீது போட கொடுத்ததாகவும், மாலையில் ரசீது போட இருந்தபோது போலீஸாா் கைப்பற்றியதாகவும் தெரிவித்தாராம்.
இதையடுத்து கணக்கில் வராத ரூ.91 ஆயிரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் நகராட்சி ஊழியா்களின் கைப்பேசிகளை ஆய்வு செய்த போது யுபிஐ மூலம் பணப் பரிவா்த்தனை செய்யப்பட்ட விவரங்களை சேகரித்தனா். இதில் சிலரது கணக்கில் அதிக பணம் வரவாகியிருந்தது.
இதுகுறித்து விசாரித்த போது நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீா் வரி செலுத்துவதற்காக சிலா் அனுப்பியது என்றும், அதற்கான ரசீது போடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சோதனையில் ரூ.91 ஆயிரம் கைப்பற்றப்பட்டது குறித்து நகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்டிருப்பதாக ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோதனையில் சிக்கிய நகராட்சி அலுவலா்கள் 6 போ் மீது கள்ளக்குறிச்சி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

போடி நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




