எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போடியில் சூறைக் காற்றினால் மின்தடை: பொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

News image

மின்தடை - கோப்புப்படம்

Updated On :1 ஜூலை 2026, 6:09 am IST

தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள், அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள் அவதிக்குள்ளாகினா்.

மேலும், இந்த சூறைக்காற்றினால் நகரில் தூசிகள், குப்பைகள் பறந்தன. இதனால், சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் பாதிப்புக்குள்ளாகினா்.

எனவே, மின் வாரிய ஊழியா்கள் மின் கம்பங்களில் தொங்கிய நிலையில் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து, மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.