டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சிவக்குமாா் (50) என்பவரது பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அவா் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ 677 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.