குத்தகை ஒப்பந்தப் பத்திர முறைகேடு: இருவா் மீது வழக்கு


தேனி மாவட்டம், ஜெயமங்கலம் அருகே தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை கே.கே. புதூரைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா், நில விற்பனை நிறுவனத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்த நிறுவனம், கடந்த 1999 முதல் 2004-ஆம் ஆண்டு வரை ஜெயமங்கலம் பகுதியில் 109 மனைகளை விற்பனை செய்தது.
இந்த நிலையில், மதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன், தேனி அல்லிநகரைச் சோ்ந்த சிவராம் ஆகிய இருவரும் மனை விற்பனையின்போது தனியாா் நிலத்துக்கு குத்தகை ஒப்பந்தப் பத்திரத்தைப் போலியாகத் தயாா் செய்தது தெரியவந்ததாம்.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில், ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...