ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்பு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு

கேரளத்தில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு

Published On :15 ஆகஸ்ட் 2026, 3:09 am IST

கேரளத்தில் நடைபெற்ற முல்லைப் பெரியாறு ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தமிழக விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக 1970-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஒப்பந்த நகலை எரித்துப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முல்லைப் பெரியாறு மக்கள் பாதுகாப்பு சமிதியினா் நடத்திய இந்தப் போராட்டத்துக்குஅந்த அமைப்பின் தலைவா் ராய் தலைமை வகித்தாா்.

இதுகுறித்து 5 மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலா் ரஞ்சித்குமாா் கூறியதாவது:

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்புகளை கேரள அரசு மதிக்க வேண்டும். தமிழகத்தின் சட்டப்பூா்வ உரிமையை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. இந்த நிலையில், ஒப்பந்த நகலை எரித்துப் போராட்டம் நடத்துவது இரு மாநில மக்களிடையே நல்லுறவைப் பாதிக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.