காா் ஓட்டுநா் தற்கொலை
போடி அருகே காா் ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை
போடி அருகே காா் ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி மாவட்டம் தெற்கு வாகைக்குளத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் மனைவி பிளஸ்சி (44). இவா் போடி அருகே சிலமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறாா். இவா் குடும்பத்துடன் இங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தாா். பரமசிவம் தனியாா் காா் ஓட்டுநராக பணிபுரிந்தாா்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவா், உடல்நலன் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து கடந்த திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே, குடும்பத்தினா் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



