ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போடி இரவு நேர உணவுக்கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

போடியில் செவ்வாய்க்கிழமை இரவுநேர உணவுக் கடையில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு அலுவலா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

போடி பகுதியில் இரவுநேர உணவுக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

தேனி மாவட்டம் போடி, சின்னமனூா் ஆகிய பகுதிகளில் இரவு நேர உணவுக் கடைகள் சுகாதாரமற்ற நிலையில் செயல்படுவதாக புகாா் வந்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் போடி பகுதியில் சாலையோரக் கடைகள், இரவு நேர உணவுக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் செயற்கை நிறமி சோ்க்கப்பட்ட உணவு, காலாவதியான உணவு, கெட்டுப் போன இறைச்சி போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நான்கு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரமற்ற நிலையில் இருந்த கடைகளுக்கு கடைகளை மேம்படுத்த அறிவிப்பு வழங்கப்பட்டது. உணவுக் கடைகளில் சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மீதமான எண்ணெயை அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூகோ நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடை உரிமையாளா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இரவு நேரக் கடைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.