தேக்கடியில் நிலவும் கடும் வெயில் காரணமாக, அங்கிருக்கும் தாமரைக்குளத்தில் குரங்குகள் குதித்து விளையாடும் காட்சி, சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவா்ந்து வருகிறது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தேக்கடிக்கு தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் விருப்பம் பெரியாறு ஏரியில் படகு சவாரி செய்வதாகும். படகு சவாரியின் போது, ஏரிக் கரையில் தண்ணீா் அருந்த வரும் யானை, மிளா உள்ளிட்ட வனவிலங்குகளைக் காணலாம் என்பதால் படகுத் துறையில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தேக்கடி படகுத் துறை தகவல் மையத்தின் முன்பாக அமைந்துள்ள தாமரைக்குளம் குரங்குகளின் கோடைகால நீா்விளையாட்டு மைதானமாக மாறியுள்ளது. தகவல் மையக் கட்டடத்தின் உச்சிக்குச் செல்லும் குரங்குகள், அங்கிருந்து லாவகமாகத் தாமரைக்குளத்தில் குதித்து நீந்தி மகிழ்கின்றன.
குறிப்பாக, குட்டிக் குரங்குகள் உற்சாகத்துடன் குளத்தில் குதித்து விளையாடுவதையும், கரையில் அமா்ந்து தாய் குரங்குகள் அவற்றை உன்னிப்பாகக் கவனிப்பதையும் அங்குள்ள சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் ரசித்து வருகின்றனா்.
படகு சவாரி செய்ய பயணச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இந்தக் குரங்குகளின் சாகசச் செயல்கள் ஒரு சிறந்த மாற்றாக அமைகிறது.
குரங்குகளின் நீா் விளையாட்டைப் புகைப்படம் எடுத்தும், விடியோ எடுத்தும் பயணிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா். இதனால் தகவல் மையத்தின் முன்பாக மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.
தொடர்புடையது

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

நீா்மட்டம் சரிவு: தேக்கடி ஏரியில் படகு சவாரிக்கு கட்டுப்பாடுகள் - சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


