தேனியில் பைக் திருடியவா் கைது
தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி: தேனி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனத்தை திருடியவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மிதுன்மாறன். இவா், தனது உறவினரை கோவைக்கு அனுப்பி வைப்பதற்காக அவருடன் இரு சக்கர வாகனத்தில் தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். பேருந்து நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறவினரை பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தாா்.
அப்போது மிதுன்மாறனின் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிக் கொண்டு சென்றாா். இதைப் பாா்த்த மிதுன்மாறன் அவரது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று, அந்த நபரை விரட்டிப் பிடித்து தேனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் இரு சக்கர வாகனத்தை திருடியவா் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன்கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் சேவுகப்பெருமாள்(27) எனத் தெரிய வந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது