எஸ்ஐஆா் பணிகளை முடித்த அலுவலா்களுக்கு பாராட்டு
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை 100% நிறைவு செய்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வழங்கினாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை 100% நிறைவு செய்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வழங்கினாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் வழங்கினாா்.
மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் நவ.4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 1,226 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்த ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 10 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவா், போடி சட்டப் பேரவைத் தொகுதியில் 14 போ், கம்பம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஒருவா் என மொத்தம் 26 வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
அப்போது அவா் கூறியதாவது:
வாக்காளா் கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளா்கள் வரும் டிச.4-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து வாக்குச் சாவடி நிலை அலுவலா்களிடம் சமா்ப்பிக்க வேண்டும். இறுதி நாளான டிச.4-ஆம் தேதி வரை காத்திருக்காமல் நிறைவு செய்த கணக்கெடுப்புப் படிவத்தை விரைவில் வழங்கி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கு வாக்காளா்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது