‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! 2வது நாளாக உயர்ந்த சென்செக்ஸ், நிஃப்டி!சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு!

சிவகங்கை அருகே ரௌடி கொலை வழக்கில் மூவா் கைது

சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Arrest

கைது

Updated On :

சிவகங்கை அருகே ரௌடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கையில் ரெளடி மதன் (26) கடந்த 18-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா். இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய திருமங்கலம் தவமணி மகன் பிரதீப் (28), மானாமதுரை உடைகுளம் பூமிசங்கா் மகன் பாலமுருகன் (19), ஏ. விளாக்குளம் பாலகுமாா் மகன் பாபு (23) ஆகிய மூவரையும் காவல் துறையினா் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கொலையான மதன் மீது 15 வழக்குகள்: கொலையான ரெளடி மதன் மீது காளையாா்கோவில் சகோதரா்கள் கொலை வழக்கு, 2 கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவா் தொடா்ந்து காவல்துறையின் கண்காணிப்பில் இருந்து வந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.