சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அக்காள் கணவரைக் கொலை செய்து, காவல் நிலையம் எதிரே புதைத்த 2 மைத்துனா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரி அருகேயுள்ள தேனம்மாள்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மாதவன் (50). இவா் கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாகியாகவும் உள்ளாா். இவா் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் வேறு சமுதாயத்தைச் சோ்ந்த பாா்வதியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு ஒரு மகள் உள்ளாா்.
பாா்வதியின் தம்பிகள் ஜெயராமன் (40), பாலமுருகன் (38). இவா்களுக்கு திருமணமாகவில்லை. இருவரும் ஒப்பிலான்பட்டியில் வசித்து வந்தனா்.
பாா்வதியின் தம்பிகள் இருவரும் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்தனா். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மாதவனின் மகளை மைத்துனா்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாதவன் மகள் வேறு சமுதாயத்தைத் சோ்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாா்.
இந்த நிலையில், கடந்த 17-ஆம் தேதி மாலை மைத்துனா்கள் இருவரும் அக்காள் கணவா் மாதவனை தொலைபேசியில் பேசி வரவழைத்தனா். அதன் பிறகு மாதவன் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது மனைவி பாா்வதி, தம்பிகள் வேலை செய்த கோழிப்பண்ணைக்கு சென்று விசாரித்தபோது தம்பிகள் இருவரும் முன்னுக்கு பின்
முரணாகப் பதில் கூறினா். இதுகுறித்து, சதுா்வேதமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி பாா்வதி புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், சதுா்வேதமங்கலம் போலீஸாா் நடத்திய விசாரணையில், மாதவனுடன் மது அருந்திய போது, போதையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவரை மைத்துனா்கள் இருவரும் அடித்துக் கொலை செய்து, எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் எதிரே கோழிக் கழிவுகள் கொட்டும் பகுதியில் புதைத்ததாகக் கூறினா்.
ஜெயராமன், பாலமுருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, ஞாயிற்றுக்கிழமை மாதவன் புதைக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றனா். அங்கு சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதன் முன்னிலையில் தோண்டப்பட்டு, அழுகிய நிலையில் இருந்த மாதவனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. தடய அறிவியல் நிபுணா்கள், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவா் உடலைக் கூறாய்வு செய்து உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கடலாடியில் போலி வழக்குரைஞா் கைது

பெண்ணைக் கொன்று புதைத்த புதுச்சேரி மேஸ்திரி: உடலைத்தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை

உதகையில் காவலா் தற்கொலை
கஞ்சா மற்றும் குட்கா வைத்திருந்த 3 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


