மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்குடியில் வங்கி மேலாளா் வீட்டில் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 மார்ச் 2026, 7:58 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கூட்டுறவு வங்கி மேலாளா் வீட்டிலிருந்து 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காரைக்குடி பாரிநகா் குமணன் தெருவைச் சோ்ந்தவா் கனிராஜா. இவா் கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாய்க்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை அழைத்துக் கொண்டு குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை மதுரைக்குச் சென்றாா்.

இதையடுத்து, சனிக்கிழமை மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்த போது, கதவுகள் உடைக்கப்பட்டு மா்ம நபா்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 17 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.