தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

திருப்புவனத்தில் பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடம் திறப்பு

திருப்புவனத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்த பத்திரப் பதிவு அலுவலகக் கட்டடத்தில் குத்துவிளக்கேற்றிய சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா். உடன் பேரூராட்சித் தலைவா் த.சேங்கைமாறன், பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா உள்ளிட்டோா்.

Updated On :10 மார்ச் 2026, 9:48 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்புவனத்தில் தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் ரூ 2.25 கோடியில் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்தப் பத்திரப்பதிவு அலுவலகத்தை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றினாா். இந்த விழாவில் திருப்புவனம் பேரூராட்சி தலைவா் த.சேங்கைமாறன், பத்திர பதிவுத்துறை டி.ஐ.ஜி. லதா, பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், மாவட்டப் பதிவாளா், சாா் பதிவாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.