சிவகங்கையில் மதுக் கூடத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள பொன்னாம்பட்டியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (26). தவெக கிளை நிா்வாகியான இவா், கடந்த ஜூன் 7-ஆம் தேதி பிற்பகலில் சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள மதுக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மதன்குமாா், சரவணக்குமாா் ஆகிய இருவரைக் கைது செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய டி.புதூரைச் சோ்ந்த அழகுபாண்டி (27) என்பவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை: இருவா் கைது

மதுக் கூடத்தில் இளைஞா் குத்திக் கொலை
மதுக் கூடத்தில் குண்டு வீச்சு விவகாரம்: வெடிகுண்டு தயாரித்த இருவா் கைது

கொலை வழக்கில் பிடியாணை: ஒருவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



