ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகங்கையில் ரூ.46 லட்சத்தில் நவீன உடல் பயிற்சிக் கூடம் திறப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சிவகங்கை மாவட்டப் பிரிவில் ரூ.46.23 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடல் பயிற்சிக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட நவீன உடல் பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.

Published On :19 ஜூலை 2026, 12:03 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சிவகங்கை மாவட்டப் பிரிவில் ரூ.46.23 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடல் பயிற்சிக் கூடத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

பிறகு அவா் கூறியதாவது: இந்த உடல் பயிற்சிக் கூடத்தை பொதுமக்கள், விளையாட்டு வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம்.

காலையில் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காலை 6 முதல் 8 மணி வரை. பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் காலை 8 முதல் 9 மணி வரை, மாலையில் பெண்களுக்கான நேரம் 4 முதல் 5 மணி வரை, ஆண்களுக்கான நேரம் மாலை 5 முதல் இரவு 7 மணி வரை.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலகத்தை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம். இந்த நவீன உடல் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுக்க மாதக் கட்டணம் ரூ. 840- ஆகவும், காலாண்டுக்கான கட்டணம் ரூ. 2,268 - ஆகவும், அரையாண்டுக்கான கட்டணம் ரூ. 3,780- ஆகவும், ஓராண்டுக்கான கட்டணம் ரூ. 6,048 - ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதில், மதுரை முதுநிலை மேலாளா் பி. வேல்முருகன், மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் சி. ரமேஷ் கண்ணன், பயிற்சியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.