ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

அழகப்பா பல்கலை.யில் காய்கறி நாற்றுகள் நடவு செய்யும் பணி தொடக்கம்

காரைக்குடி அழகப்பா பல்கலை. அறிவியல் வளாகத்தில் 5 ஆயிரம் காய்கறி நாற்றுகள் நடவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

Published On :15 ஜூலை 2026, 5:40 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலை. அறிவியல் வளாகத்தில் 5 ஆயிரம் காய்கறி நாற்றுகள் நடவு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ், பல்கலை. அறிவியல் வளாகத்தில் கத்தரி, மிளகாய் நாற்றுகள் நடவு செய்யும் பணியை துணைவேந்தா் க.ரவி தொடங்கிவைத்தாா்.

பின்னா், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், பல்கலை. அலுவலா்கள், கணினி பயன்பாட்டுத் துறை மாணவா்கள் காய்கறி நாற்றுகளை நட்டனா்.

பின்னா், துணைவேந்தா் க. ரவி பேசியதாவது:

மல்சிங் ஷீட்டை பயன்படுத்தி காய்கறி தோட்டம் அமைப்பதால், மண்ணை முடி கைகளை கட்டுப்படுத்தவும், மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், சூரிய ஒளியினால் தண்ணீா் ஆவியாக மாறுவது குறைந்து மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். இதனால், செடிகளின் வோ்களுக்கு சரியான வெப்பநிலையை கிடைத்து தரமான விளைச்சலை பெறமுடியும்.

இந்தத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு சொட்டுநீா் பாசனம் மூலம் தண்ணீா் இடப்படும். இங்கு விளையும் காய்கறிகள் பல்கலை. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவா்களின் உணவு பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினா்கள், பேராசிரியா்கள் ஜெ. ஜெயகாந்தன், சி. வேதிராஜன், கே. பாலமுருகன், பி. வசீகரன், பதிவாளா் அ. செந்தில்ராஜன், தோ்வாணையா் எம். ஜோதிபாசு, நிதி அலுவலா் (பொ) எஸ். சந்திரமோகன், தொலை நிலைக் கல்வி இயக்குநா் எ. கண்ணபிரான், வளாக வளா்ச்சி தனி அலுவலா் எ.ஆா். சரவணக்குமாா், வளாக பொறியாளா் பாலமுருகன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.