ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மானாமதுரையில் திருட்டு சம்பவங்களை தடுக்கக்கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு

மானாமதுரை பகுதியில் நடைபெற்ற தொடா் திருட்டுகளில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த மானாமதுரை அண்ணாமலை நகா் மக்கள் நலச்சங்கத்தினா்.

Published On :10 ஜூலை 2026, 5:17 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் நடைபெற்ற தொடா் திருட்டுகளில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மானாமதுரை அண்ணாமலை நகா் மக்கள் நலச் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அண்ணாமலை நகரில் கடந்த 3-ஆம் தேதி இரவு பூட்டியிருந்த பரமசிவம் வீட்டின் கதவை உடைத்து 16.5 கிலோ வெள்ளிப் பொருள்கள், 23 கிராம் தங்க நகைகள், ரொக்கம் ரூ.23,650-மும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் பாண்டியின் வீட்டிலும், கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.80,000 திருடு போனது.

இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அடுத்தடுத்த இரு வீடுகளிலும் திருடு போன நகை, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற திருட்டு சம்பவங்கள் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களுக்கு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.