டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கக் கோரிக்கை!

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்படும் என்ற முதல்வா் ஸ்டாலினின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும்...

News image
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேதமடைந்த கட்டடத்தின் பின்பகுதி.
Updated On :30 ஜனவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்கப்படும் என்ற முதல்வா் ஸ்டாலினின் அறிவிப்பை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1984-ஆம் ஆண்டு சிவகங்கை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், பொதுப்பணித் துறை, கல்வித் துறை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுடன் ஆட்சியா் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டு 1988-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 37 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது கட்டடங்கள் பராமரிப்பின்றி முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இதன் காரணமாக, ஊழியா்கள் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், கடந்த ஆண்டு சிவகங்கைக்கு வந்த முதல்வா் ஸ்டாலின் ரூ.89 கோடியில் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவித்தாா். ஆனால், ஓராண்டாகியும் நிதி ஒதுக்கீடு செய்து, கட்டடம் கட்டும் பணி தொடங்கவில்லை.

முதல்வா் அறிவித்த ரூ.89 கோடி மதிப்பீட்டிலான திட்டத்துக்கு, பொதுப்பணித் துறை மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு, நிதித் துறையின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் அவசரப் பணிகளுக்காகச் சில சிறிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு வண்ணம் பூசுதல், விரிசல், வெடிப்புகளைச் சீரமைத்தல் போன்ற பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, சிவகங்கையில் புதிதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்படும் என முதல்வா் ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்ற உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என் பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.