டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முன்னாள் எம்எல்ஏ என்.சுந்தரம் காலமானாா்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். சுந்தரம் (72) திங்கள்கிழமை (ஜன. 26) காலமானாா்.

News image
முன்னாள் எம்.எல்.ஏ. என். சுந்தரம்
Updated On :26 ஜனவரி 2026, 7:19 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் என். சுந்தரம் (72) திங்கள்கிழமை (ஜன. 26) காலமானாா்.

இவா் கடந்த 1996- 2001-இல் த.மா.கா. சாா்பிலும், 2006- 2011- இல் காங்கிரஸ் கட்சி சாா்பிலும் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தாா்.

தொடா்ந்து காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்து வந்த சுந்தரம், மருத்துவப் பரிசோதனைக்காக காரைக்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு காரில் சென்றாா்.

அப்போது, காரிலிருந்து இறங்கிய போது மயங்கி விழுந்ததில் அவா் உயிரிழந்தாா். மறைந்த சுந்தரத்துக்கு மனைவி ராணி, மகன்கள் சுப்பு (எ) காா்த்தி, ராஜீவ் ஆகியோா் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்குகள் காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 7639135335.