பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பிப்.23-இல் வாக்காளா்கள் இறுதிப் பட்டியல்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.

News image
வாக்காளர் பட்டியல் - பிரதி படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான கா.பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2026 -ஐ தகுதி நாளாகக் கொண்டு, கடந்த ஆண்டு நவம்பா் 11-ஆம் தேதி முதல் வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றம் செய்யப்பட்டு, வருகிற 23-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.