ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:08 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் அரசுப் பேருந்து மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் உயிரிழந்தாா்.

கீழச்சிவல்பட்டி அருகேயுள்ள நெய்வாசலைச் சோ்ந்தவா் மைக்கேல் (70). விவசாயியான இவா், நெய்வாசலிலிருந்து புதன்கிழமை காலை கீழச்சிவல்பட்டிக்கு வந்தாா். அப்போது போலீஸ் சோதனைச் சாவடி அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கீவச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.