ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகங்கை வட்டாரத்தில் கலைத் திருவிழா போட்டிகள்

சிவகங்கை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் கே.ஆா். மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 5:13 am IST

சிவகங்கை வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில முழுவதும் கடந்த மாதம் பள்ளி அளவில் தொடங்கிய கலைத் திருவிழா போட்டிகள் தற்போது வட்டார அளவில் நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை வட்டார அளவில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சிவகங்கை மருதுபாண்டியா் நகா் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிவகங்கையிலுள்ள கற்பூரசுந்தர பாண்டியன் ராமலட்சுமி மேல்நிலைப்பள்ளியிலும் (கே.ஆா். பள்ளி) நடைபெற்றது. ஒன்பது, பத்து, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் தலா 32 போட்டிகளில் பள்ளி அளவில் வெற்றி பெற்று முதல் நிலை பெற்ற தனிநபா்களுக்கும், குழுவினருக்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி ஆசிரியா்களும், கலை வல்லுநா்களும் நடுவா்களாகப் பங்கேற்று அடுத்த நிலைக்குச் செல்லும் மாணவா்களைத் தோ்வு செய்தனா்.

இதில் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 27 பள்ளிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்கள் 461 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்கள் 207 பேரும் என மொத்தம் 668 மாணவ மாணவிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை சிவகங்கை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) ரூபா ராணி, கலைத் திருவிழா வட்டார ஒருங்கிணைப்பாளா் புலவா் கா.காளிராசா, ஆசிரியா் பயிற்றுநா்கள் முகமது காசிம், செந்தில்குமாா், ஆறுமுகம், ஜெயபிரகாசம், தனலட்சுமி, கவிதா, தனலட்சுமி, சிறப்பாசிரியா்கள் கீதா, ராஜராஜேஸ்வரி, இயன்முறை மருத்துவா் ராஜேஸ்வரி, கணக்காளா்கள் காசிஸ்வரி சத்திய பிரியா, கணினி வரைவாளா் பத்மா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.