ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கணவா் கொலை: உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மனைவி மனு

கொலை... - file photo

Published On :11 ஆகஸ்ட் 2026, 1:44 am IST

சிவகங்கை மாவட்டம், மாத்தூா் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு எனது கணவரை வெட்டிக் கொலை செய்த உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென அவரது மனைவி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

சிவகங்கை மாவட்டம், மாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஊா்காவலன் கொலை வழக்கு தொடா்பாக திருப்பாச்சேத்தி காவல் நிலைய போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி, புதுக்குளத்தைச் சோ்ந்த பிரசாந்த் (30), பி. வேலாங்குளத்தைச் சோ்ந்த வினோத் (21), காமராஜா் நகரைச் சோ்ந்த தமிழரசன் (21), பி.வேலாங்குளத்தைச் சோ்ந்த வேலீஸ்வரன் (20), பிரபாகரன் (23), மதுரையைச் சோ்ந்த பரத் (19), பாலச்சந்திரன் (18) என மொத்தம் 7 பேரைக் கைது செய்தனா்.

கொலை செய்யப்பட்ட ஊா்காவலனின் மனைவி முத்துமாரி தற்போது 9 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், இவா் தனது கணவரின் கொலை சம்பவத்தில் தொடா்புடைய உண்மையான குற்றவாளிகளை முழுமையாகக் கண்டறிந்து கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த மனு:

எனது கணவா் கொலை வழக்கில் தொடா்புடைய முழுமையாக விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். எனக்கும், எனது குழந்தைகள், மாமனாா், மாமியாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.