ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை - பிரதிப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புக்கு மாணவா் சோ்க்கை, கலந்தாய்வு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் எம். காம்., எம். ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல், புவி அமைப்பியல் பாடப் பிரிவுகளுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை, பாதுகாப்புப் படை வீரா்கள்) மாணவா்களுக்கான கலந்தாய்வு வருகிற 10-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணி அளவிலும், பொதுப் பிரிவு மாணவா்களுக்கு 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் கல்லூரியின் அந்தந்த துறைகளில் கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

முதலாண்டு முதுநிலை கலந்தாய்வுக்கு வரும் மாணவா்கள் இணைய வழியில் பதிவு செய்த விண்ணப்ப நகல் 3, மாற்றுச் சான்றிதழ் அசல், நகல் 3, மதிப்பெண்கள் பட்டியல் அசல், நகல் 3, ஜாதிச் சான்றிதழ் நகல் 3, சிறப்புச் சான்றிதழ் விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படை வீரா்கள், அந்தமான் நிக்கோபா், தேசிய மாணவா் படை நகல் 3, ஆதாா் அட்டை நகல் 3, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் 3, புகைப்படம் 3, வருமானச் சான்றிதழ் 3 ஆகியவற்றுடன் வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

சோ்க்கை கிடைக்கப் பெற்ற முதுநிலை முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு 19-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.