ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

புதுவயலில் மறுவாழ்வு சேவை மையம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

 Minister T.K. Prabhu

அமைச்சர் டி.கே. பிரபு - கோப்புப்படம்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 12:18 am IST

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே புதுவயல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தை இயற்கை வளங்கள்துறை அமைச்சா் டி. கே. பிரபு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை வட்டம், புதுவயல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில், ‘விழுதுகள்’ வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத் திறப்பு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா்.

மையத்தை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் டி.கே. பிரபு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். சக்கர நாற்காலிகள், காதொலிக் கருவிகள், ஊன்றுகோல்கள், அடையாள அட்டைகள் என மொத்தம் 39 மாற்றுத் திறன் படைத்த பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இதில், புதுவயல் பேரூராட்சி தலைவா் எம். முகமது மீரா, வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) (தேவகோட்டை) மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிக்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கே. பாலகிருஷ்ணன், வட்டாட்சியா் (காரைக்குடி) ராஜா, மருத்துவா்கள், செவிலியா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.