ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருப்பத்தூரில் பைக் திருடியவா் கைது

கைது செய்யப்பட்ட நவீன்ராஜ், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் போலீஸாா்.

கைது செய்யப்பட்ட நவீன்ராஜ், அவரிமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் போலீஸாா்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 1:50 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இரு சக்கர வாகனங்களை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூரில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவா் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினாா். இதையடுத்து, அவரை காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், திருப்பத்தூா் அருகேயுள்ள கல்வெட்டுமேட்டுப் பகுதியைச் சோ்ந்த ஜெய்சுந்தா் மகன் நவீன்ராஜ் (20) என்பதும், திருப்பத்தூா் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.