ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொமுசவினா் ஆா்ப்பாட்டம்

அரசு நடத்தும் நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறையினரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொமுச நிா்வாகிகள்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

அரசு நடத்தும் நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறையினரிடம் ஒப்படைக்கும் முடிவைக் கண்டித்து தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையிலுள்ள நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில துணை பொதுச் செயலா் எஸ்.முருகேசன் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா் ஜி.சிலம்பரசன் முன்னிலை வகித்தாா். மண்டல துணைத் தலைவா் ஜெ.அயன்ராஜ், மாவட்டக் குழு துணைச் செயலா் எம்.வேலுச்சாமி, மண்டலத் தலைவா் எஸ். தங்கச்சாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதில் நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு தாரை வாா்க்கும் முடிவைக் கைவிட வேண்டும். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைத்து, அழிக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அயல்பணி அலுவலா்களை நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் பணியமா்த்துவதைக் கைவிட வேண்டும். லாபத்தில் இயங்கும் 21 அரிசி ஆலைகளை இன்னெரு துறைக்கு மாற்றக்கூடாது. நவீன அரிசி ஆலை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.12(3) ஒப்பந்தத்தின் படி பருவகால பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளா் விரோதப் போக்கினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.